இந்திய பிரதமருக்கு சியோல் அமைதி விருது!

Saturday, February 23rd, 2019

தென் கொரியாவின் உயரிய விருதான சியோல் அமைதி விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவினதும், உலகத்தினதும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களிப்பை வழங்கியமைக்காகவும் மோடிக்கு, தென் கொரிய நாட்டின் உயரிய விருதான சியோல் அமைதி விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது 2 நாள் விஜயமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு விருது வழங்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு முதல் தென்கொரிய அரசினால் வழங்கப்படும் சியோல் அமைதி விருதைப் பெற்றுள்ள 14 ஆவது நபர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: