இந்திய எல்லை அருகே சீனா படைகளை குவிப்பு – பெண்டகன்

Sunday, May 15th, 2016

சீனா தனது பாதுகாப்புத்திறனை அதிகரித்து வருவதாகவும், இந்திய எல்லையையொட்டி தனது ராணுவத்தை அதிக அளவில் ரோந்து பணியில்  ஈடுபடுத்தியிருப்பதாகவும் பெண்டகன் தெரிவித்துள்ளது.

சீனாவின் ராணுவ மற்றும் பாதுகாப்பு வளர்ச்சி குறித்த 2016 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை பெண்டகன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்பித்தது. இதன்பிறகு, கிழக்கு ஆசியாவுக்கான பாதுகாப்பு செயலர் ஆப்ரகாம் எம்.டென்மார்க் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “ இந்தியாவின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்புத்திறன் மற்றும் ராணுவ படையை சீன ராணுவம் அதிகரித்துள்ளதை நாங்கள் கவனித்தோம். இருப்பினும், இதற்கு பின்னால் உள்ள உண்மையான  நோக்கத்தை முடிவு செய்வது கடினமான ஒன்றாகும்” என்றார்.

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஆஷ்தோன் கார்டர்  சமீபத்திய இந்திய வருகை பற்றி கருத்து தெரிவித்த டென்மார்க், இந்த சுற்றுப்பயணம் மிகவும் பயனுள்ளதாகவும் நேரமறையாகவும் இருந்ததாக தெரிவித்தார்.

Related posts: