இந்திய இராஜதந்திரத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை- தமிழக முதலமைச்சர்!

மத்திய அரசாங்கத்தின் இராஜதந்திர செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மதிக்காது செயற்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீன்வர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. அதேவேளை இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|