இந்தியா, ரஷ்யா, துருக்கி எங்களுடன் கைக்கோர்க்க வேண்டும் – டிரம்ப் !

Friday, August 23rd, 2019

ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக இந்தியா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் இடம்பெற்று வரும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஏனைய நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை.

ஆப்கானிஸ்தான் அமெரிக்காவுக்கு மிக தொலைவில் இருப்பினும் அமெரிக்கா மட்டுமே குறித்த பயங்கரவாதிகளுக்கு எதிராக முழுவதுமாக போராடி வருகின்றது.

ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு அருகில் உள்ள நாடுகள் ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் பயங்கரவாதத்திற்கு எந்தவொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பது வருத்தமளிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஆகவே இந்த விடயத்தில் இந்தியா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதேவேளை, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வந்த பயங்கரவாதிகள் அமெரிக்க சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஏற்பட்டுள்ள செலவீனத்தை கருத்திற் கொண்டு அவர்களை ஐரோப்பிய நாடுகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறித்த கைதிகளை ஐரோப்பிய நாடுகள் ஏற்க மறுத்தால் அவர்களை விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

Related posts: