இந்தியா முடிவுக்கு சீனா வரவேற்பு!

Monday, September 26th, 2016

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற பா.ஜ.க.வின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு காந்தி பிறந்த நாளான வரும் 2-ம் திகதி இந்தியா ஒப்புதல் வழங்கும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பருவ நிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் சேரும் இந்தியாவின் முடிவிற்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங்ஷூவாங் செய்தியாளர்களிடம் பேசியதாவது

பருவநிலை மாற்ற சவால்களை மனித சமுதாயம் சந்தித்து வருகிறது. இந்த நோய் எதிர்ப்பில் இருந்து எந்த நாடும் தப்பித்து இருக்க முடியாது. அதனால் அனைவரும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இணைந்து போராட வேண்டும். இந்தியாவின் முடிவை சீனா வரவேற்கிறது. இது பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்ற மற்றொரு உந்து சக்தியாக விளங்கும். ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியா உள்ளிட்ட அனைத்து தரப்பினருடன் சீனா இணைந்து செயல்படும்.

24-1443084210-indochina

Related posts: