இந்தியா – பாகிஸ்தான் ஒற்றுமைப்படவேண்டும் : பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்

வடகொரியா, அமெரிக்காவை போன்று இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக வேண்டும் என பாகிஸ்தான் ஆளும் கட்சியான முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷரிப் கோரிக்கை விடுத்துள்ளார்.
அணுவாயுத பிரச்சினையை மையப்படுத்தி நீண்டகாலமாக எதிரி நாடுகளாக இருந்த அமெரிக்காவும் வடகொரியாவும் ஒரே மேசையில் அமர்ந்து பேசியுள்ளன. அதேபோல் காஷ்மீரை மையப்படுத்தி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முறுகலை பேச்சுவார்த்தை மூலம் ஏன் தீர்த்து கொள்ள முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியான இவர் அடுத்த மாதம் 25 ஆம் திகதி பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே உதவி - இலங்கைக்கான நோரவே தூதுவர்!
நீர்த்தேக்கத்தில் வெடிப்பு : நூற்றுக்கணக்கானோர் மாயம்!
தஞ்சம் கோருவோரின் தற்காலிக வதிவிட அனுமதி நீடிப்பு; பிரான்ஸ் பாராளுமன்றம் அனுமதி!
|
|