இந்தியா-பாகிஸ்தான் எல்லை முழுவதும் 2018 டிசம்பருக்குள் சீல் வைக்கப்படும் -மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்!
Friday, October 7th, 2016
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி இராணுவம் முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 18ம் திகதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உரி தாக்குதலில் இந்தியா பொறுமை இழந்து எதிர் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் கண்டித்து வருகிறது. சீறி எழுந்த இந்தியா ஒரே சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை கொன்றதுடன், 8-க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்களை தகர்த்தது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்து தாக்க ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய இராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே 2 ஆயிரத்து 289.66 கிலோ மீட்டர் தொலைவுக்கு சர்வதேச எல்லைப் பகுதி உள்ளது. இந்த எல்லையில் 2 ஆயிரத்து 34.96 கிலோ மீட்டர் தொலைவு எல்லை பகுதி ராணுவ வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும் பகுதி இரும்பு கம்பி வேலி போட்டு தடுக்கப் பட்டுள்ளது.மீதமுள்ள 254.80 கிலோ மீட்டர் தொலைவு எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் இல்லை. இரும்பு கம்பி முள் வேலியும் இல்லை. இந்த எல்லை வழியாக தீவிர வாதிகள் ஊடுருவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானுடன் பஞ்சாப் 553 கி.மீ., ராஜஸ்தான் 1037 கி.மீ., குஜராத் 508 கி.மீ., காஷ்மீர் 1225 கி.மீ. தொலைவுக்கு எல்லையை கொண்டுள்ளது. இதையடுத்து இந்த 254 கிலோ மீட்டர் தொலைவு எல்லைக்கு ராணுவ வீரர் களை நிறுத்தியும், முள் கம்பி வேலி அமைத்தும் எல்லையை முழுமையாக “சீல்” வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற் கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்றும், நாளையும் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், காஷ்மீர் மாநில முதல்- மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 4 மாநிலங்களிலும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவுக்கு எல்லையில் பாதுகாப்பு இல்லை என்பது ஆய்வு செய்யப்பட்டது.கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் எல்லைகள் மூடப்படும். தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க நடவடிக்கை, எல்லைகளை பாதுகாக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.வாருகிற 2018 டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா -பாகிஸ்தான் எல்லை முழுவதும் சீல் வைக்கப்படும் என கூறினார்.
Related posts:
|
|