இந்தியா – தஞ்சாவூர் தேர் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி!

இந்தியா – தஞ்சாவூரில், களிமேடு பகுதியில் இடம்பெற்ற தேர் விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தேர் பவனி இடம்பெற்றது.
குறித்த தேரின் மீது மின்சார கம்பி உராய்ந்ததில் மின் ஒழுக்கு ஏற்பட்டு, அருகில் இருந்த பலரும் தூக்கி வீசப்பட்டனர்.
தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயில் எரிந்துக்கொண்டிருந்த தேரை பலத்த போராட்டங்களின் பின்னர் கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியாகினர்.
மேலும் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில், தஞ்சாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 200,000 ரூபாவும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாவும் நிதியுதவி வழங்கப்படுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதேநேரம், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 500,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளமை குறப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|