இந்தியா தக்க தண்டனையை அனுபவித்தே தீரும்: பாகிஸ்தான் ராணுவ தளபதி !

பாகிஸ்தான் பற்றி இந்தியா கட்டுக்கதைகளை தொடர்ந்து கட்டவிழ்த்துவிடுகிறது. தொடர்ந்து பொய்களை இந்தியா பரப்பி வருகிறது என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி தளபதி ரஹீல் ஷரீப் குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானில் விமானப்படை நிகழ்ச்சி நடைபெற்றது அதில் கலந்து கொண்ட ரஹீல் ஷரீப் கூறியதாவது:
பாகிஸ்தான் பற்றி இந்தியா கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுகிறது. தொடர்ந்து பொய்களை இந்தியா பரப்பி வருகிறது. பன்னாட்டு சமூகம் இந்தியாவை கண்டிக்க வேண்டும். எங்கள் தாய்நாட்டை காப்பாற்ற நாங்கள் ஓய்வில்லாமல் உழைப்போம்.சமத்துவம் மற்றும் நட்புறவு ஆகிய அண்டை நாடுகளுடன் நல்லூறவைப் பேண விரும்பும் பொறுப்புள்ள நாடு பாகிஸ்தான். அதே வேளையில் பாகிஸ்தானின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க தயாராக உள்ளோம். பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை அகற்ற வெற்றிகரமாக பாடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related posts:
|
|