‘இந்தியாவை விட சீக்கியர்களுக்கு எனது மந்திரிசபையில் கூடுதல் இடம்’ – கனடா பிரதமர்

Monday, March 14th, 2016

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருதியு வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த ஜஹான் என்ற மாணவர், ‘‘உங்கள் மந்திரிசபையில் பஞ்சாப்பை சேர்ந்த பலருக்கு வாய்ப்பு அளித்திருப்பது நன்றாக இருக்கிறது’’ என அவரிடம் கூறினார்.

உடனே ஜஸ்டின் ட்ருதியு, ‘‘இந்தியாவில் மோடியின் மந்திரிசபையில் இடம் பெற்றிருக்கிறவர்களை விட கூடுதல் சீக்கியர்களுக்கு எனது மந்திரிசபையில் இடம் அளித்திருக்கிறேன்’’ என்றார்.

கடந்த நவம்பர் மாதம் பிரதமர் பதவி ஏற்ற ஜஸ்டின் ட்ருதியு, தனது மந்திரிசபையில் 4 சீக்கியர்களுக்கு இடம் அளித்திருக்கிறார். குறிப்பாக ராணுவ மந்திரி ஹர்ஜித் சாஜனும் சீக்கியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பிரதமர் மோடியின் மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள மேனகா காந்தி பிறப்பால் சீக்கியர் ஆவார். உணவு பதப்படுத்தும் துறை மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதலும் சீக்கியர் ஆவார்

Related posts: