இந்தியாவை எச்சரிக்கும் சீனா !
Saturday, July 1st, 2017
டோங்லாங் பகுதியில் அத்துமீறி நுழைந்து அடாவடித் தனங்களில் ஈடுபட்டுள்ள சீனா சிக்கிம் எல்லையில் இருந்து இராணுவத்தை திரும்பப் பெறாவிடின் வரலாற்றில் மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும் என இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கிம் பகுதியில் இந்தியா சீனா நேபாள எல்லைகளில் டோங்லாங் அமைந்துள்ள நிலையில் அதற்கு இந்தியாவும் சீனாவும் உரிமை கோரி வருகின்றன.
இந்த நிலையில் குறித்த பகுதி தமது நாட்டுக்கு சொந்தம் எனக் தெரிவித்து சீனா அங்கு வீதிகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்தியாவும்இ பூட்டானும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியா தமது நாட்டு இராணுவத்தினரை குறித்த பகுதியில் நிலை நிறுத்தியுள்ளது. இந்த விடயம் சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா தமது இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என சீனா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எல்லைப் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் அமைதியாக தீர்த்துக் கொள்ளவே இந்தியா விரும்புவதாகவும் எல்லையில் இருந்து இராணுவத்தை திரும்ப பெற முடியாது என்றும் கூறியுள்ளது.
Related posts:
|
|