இந்தியாவுடன் பல முக்கிய விடயங்களில் ஒன்றிணைய பைடன் விருப்பம்!

Thursday, November 19th, 2020

இந்திய – அமெரிக்க உறவை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுமென அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பைடன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய பிரதமர் மோடியுடன் இணைந்து செயற்பட ஜோ பைடன் விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றை எதிர்கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சர்வதேச பொருளாதார மீட்சி, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது குறித்து இந்தியாவுடன் இணைந்து செயற்பட பைடன் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பேணுவதில் இணைந்து செயற்படுவது குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: