இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை!

Tuesday, September 27th, 2016

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துங்கள் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கிஉள்ளது.

பாகிஸ்தான், பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஜெய்ஷ் இ– முகமது, லஷ்கர் இ– தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களை தங்களுடைய நாட்டில் சுதந்திரமாக நடமாட விடுவதுடன் காஷ்மீருக்குள் இந்த இயக்கங்களின் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து அவர்களின் நாசவேலைகளுக்கு ஆதரவும் அளித்து வருகிறது.

கடந்த 18–ந் தேதி காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் ஜெய்ஷ் இ– முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட நாடு (பாகிஸ்தான்) பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதாகவும், இதுபோன்ற நாடுகளை தனிமைப்படுத்தவேண்டும் எனவும் ஐ.நா. சபையில் இந்தியா குரல் எழுப்பியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கி உள்ளது.

வெள்ளை மாளிகையின் துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் பேசுகையில்,  பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதில் பாகிஸ்தான் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறி வருகிறோம். அதில் அவர்கள் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள் என்றும் நம்புகிறோம். அதே நேரம், தனது மண்ணில் இருந்தவாறு பக்கத்து நாடுகளுக்கு (இந்தியா, ஆப்கானிஸ்தான்) எதிராக செயல்படும் அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கு எதிராகவும் பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அவர்களுக்கு புகலிடம் தராமல் அனைத்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தவேண்டும் என்றார்.

ஐ.நா.சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் பேசுவதற்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியை சந்தித்து பேசினார். அப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று பாகிஸ்தானுக்கு மீண்டும் அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. பயங்கரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் மண்ணை பாதுகாப்பு புகழிடமாக பயன்படுத்துவதை பாகிஸ்தான் தடுக்கவேண்டும் என்று நவாஸ் செரீப்பிடம் ஜான் கெர்ரி வலியுறுத்தினார்.

inter-university-studens-federation copy

Related posts: