இந்தியாவுக்காக நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதுவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் – இந்தியா அறிவிப்பு!!

Tuesday, October 3rd, 2023

இந்தியாவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதுவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய தலைவர் கொலையில் இந்திய அரசாங்க முகவர்களுக்கு பங்கு இருப்பதாக கனேடிய அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.

இருப்பினும் இந்தக் கொலைக் குற்றச்சாட்டை இந்தியா அபத்தமானது என நிராகரித்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் விரிசலடைந்துள்ளன.

இந்நிலையில் கனடாவில் இந்தியாவின் 62 தூதுவர்கள் உள்ள நிலையில் அவர்களில் 41 இராஜதந்திரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என புது தில்லி ஒட்டாவாவிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: