இந்தியாவில் 10 பில்லியன் டாலர் கறுப்பு பணம்!

Sunday, October 2nd, 2016
இந்திய அரசின் பொது மன்னிப்பு அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏறக்குறைய 10 பில்லியன் டாலர் தொகையை அறிவிக்கப்படாத வருமானமாக இந்தியாவிலுள்ள பல இலட்சக்கணக்கான மக்கள் வெளிப்படுத்திருக்கின்றனர்.

அறிவிக்கப்படாத வருமானத்தை மக்கள் தாங்களாகவே வெளிப்படுத்தி கொள்வதற்கு வழங்கப்பட்ட நான்கு மாத காலக்கெடு வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், வரி ஏய்ப்பு செய்தவர்களாக சந்தேகத்துக்குள்ளானோரில் பலர் கடைசி நேரத்தில் இதுவரை அறிவித்திராத வருமானங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

தாங்களாகவே இதனை வெளிப்படுத்தியோர் தண்டனையிலிருந்து தப்பிவிடுவர். ஆனால், இந்த தொகைக்கு 45 சதவீத வரி அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

மொத்தமுள்ள 1.2 பில்லியன் மக்கள் தொகையில் மூன்று விழுக்காடு மட்டுமே வருமான வரி செலுத்துவோர் உள்ள இந்தியாவில், கறுப்பு பணம் என்று அறியப்படும் அறிவிக்கப்படாத வருமானம் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.

இந்த எதிர்பாராத வருமானம் பொதுநல திட்டங்களுக்கு செலவழிக்கப்படும் என்று அரசு கூறியிருக்கிறது.

2014 ஆம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்ட போது. ஊழலை சரிசெய்து பில்லியன் கணக்கான டாலர்களை திரட்டுவதற்கு நரேந்திர மோதி உறுதி அளித்திருந்தார்.

_91484967_141029084647_indian_currency_notes_640x360_reuters_nocredit