இந்தியாவில் முதலாவது அதிவேக தொடருந்து!

Friday, September 15th, 2017

ஜப்பான் பிரதமர் சின்சோ அபே இந்தியாவில் முதலாவது அதிவேக தொடருந்து திட்டம் ஒன்றை ஆரம்பித்துவைத்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறப்பிடமான குஜராத்தில் இந்த திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது  இதற்காக 17 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிற்கு ஜப்பான் கடனாக வழங்கியுள்ளது.

புல்லட் ட்ரெயின் எனப்படும் இந்த அதிவேக தொடருந்து சேவை குஜராத்தின் அகமதபாத் நகருக்கும் மும்பை நகருக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தை 3 மணித்தியாலங்களில் சென்றடையும் வகையில் இந்த தொடருந்து சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: