இந்தியாவில் தொடரும் சோகம்!

Thursday, May 13th, 2021

முழு உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றினால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 727 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 37 இலட்சத்து 3 ஆயிரத்து 665 பேராக உயர்ந்துள்ளதுடன், அத்தோடு, கொரோனாவிற்கு ஒரே நாளில் 4ஆயிரத்து 120 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமான, குணமாகும் நோயாளிகளுக்கு, ‘மியூகோர்மைகோசிஸ்’ என அழைக்கப்படுகிற கருப்பு பூஞ்சைநோய் தாக்குவதை வைத்தியர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும். பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இந்த நோய் உயிருக்கு ஆபத்தானது.
நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதுதான் கொரோனா நோயாளிகளின் மியூகோர்மைகோசிஸ் பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் இப்போது கருப்புபூஞ்சை நோய் பரவல் இந்திய மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: