இந்தியாவில் டவ்தே சூறாவளியால் 14 பேர் பலி!

Tuesday, May 18th, 2021

இந்தியாவில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ சூறாவளி காரணமாக மராட்டியம் மற்றும் கர்நாடகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே சூறாவளி வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இந்த சூறாவளி மும்பை கடல் பகுதி வழியாக சென் குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி குஜராத் மற்றும் மராட்டியத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.
சூறாவளியை எதிர்கொள்ள குஜராத் மற்றும் மராட்டிய மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன. மேலும் பேரிடர் மீட்பு படையினர், முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதி தீவிரபுயல் அதிகாலை மேலும் தீவிரமடைந்தது. சூறாவளி வேகமாக நகர தொடங்கியது.
இதன் காரணமாக மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: