இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிகளவான தொற்றாளர்கள் – குறிப்பிட்ட அளவில் மட்டுப்படுத்தப்படும் என நம்புவதாக இந்திய உள்துறை அமைச்சு தெரிவிப்பு!

Saturday, May 2nd, 2020

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 2293 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

அத்துடன் இதுவே இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையாகும் எனவும் தெரிவித்துள்ன.

இதுவரையில் இந்தியாவில் மொத்தமாக 37,336 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு 71 மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொரோனா காரணமாக இந்தியாவில் அமுலாக்கப்பட்டுவரும் நாடு தழுவிய முடக்கம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில், நாடுதழுவிய முடக்கம் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு அதனை நீடிப்பதாக இந்திய அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

இரண்டாவது முறையாக இவ்வாறு முடக்கல் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று நடவடிக்கைகள் குறிப்பிட்ட அளவில் மட்டுப்படுத்தப்படும் என நம்புவதாக இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: