இந்தியாவில் ஒரேநாளில் 2 இலட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

Sunday, April 18th, 2021

இந்தியாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் இரண்டு இலட்சத்து 61 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 47 இலட்சத்து 82 ஆயிரத்து 461ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக மகராஷ்டிரத்தில் நேற்று ஒருநாளில் 67 ஆயிரத்து 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்துஇ அந்த மாநிலத்தில் தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்து 47 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதேநேரம்இ நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் ஆயிரத்து 501 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்துஇ இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 168ஆகப் பதிவாகியுள்ளது.

இதேவேளைஇ நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரையில்இ ஒரு கோடியே 28 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள நிலையில்இ தொற்றுக்கு உள்ளான 18 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்களில் 8 ஆயிரத்து 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: