இந்தியாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு 7 நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தல்!

Saturday, January 8th, 2022

வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி வெளிநாடுகளில் இருந்துவரும்  பயணிகள் இந்தியாவில் தரையிறங்கிய பிறகு ஒரு வாரகாலம் கட்டாய சுய தனிமைப்படுத்தப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் எட்டாவது நாளில் கொவிட் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்துவரும் ஒமிக்ரொன் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முகமாக மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: