இந்தியாவின் மிக நீளமான பாலம் திறப்பு!

Tuesday, December 25th, 2018

இந்தியாவின் போகிபீல் என்ற மிக நீளமான பாலம் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்படவுள்ளது.

5900 கோடி இந்திய ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பாலம், 4.9 கிலோமீற்றர் நீளமானது.

பிரம்மபுத்ரா நதிக்கு மேலாக செல்லும் இந்த பாலம், திப்ருகார் மற்றும் தெமாஜி ஆகிய இரண்டு மாவட்டங்களை இணைக்கின்றது.

இதன் மூலம் குறித்த இரண்டு நகரங்களுக்கு இடையிலான 170 கிலோமீற்றர் பயணத் தூரம் மேலும் குறைவடைவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே குறித்த பாலத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் 1997ஆம் ஆண்டு நாட்டப்பட்ட போதும், நிர்மாணப் பணிகள் இந்த ஆண்டே நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: