இந்தியாவின் மத்திய பிரதேச மாநில பேருந்து விபத்து – 40 பேர் பலி!

Wednesday, February 17th, 2021

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று கால்வாய்க்குள் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் 40 பேர் பலியாகினர்.

50 பேருடன் பயணித்த குறித்த பேருந்து வேக கட்டுப்பாட்டை மீறி பயணித்தமையே விபத்துக்கான காரணம் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ள மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கால்வாயில் இருந்து 40 பயணிகளின் சடலங்களை மீட்டனர்.

அத்துடன் மேலும் சிலர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் விபத்தினால் காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts: