இந்தியாவின்  சர்ஜிக்கல் ஒப்பரேஷனுக்கு ரஷ்யா ஆதரவு!

Tuesday, October 4th, 2016

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் முன்னெடுத்த ‘சர்ஜிக்கல் ஆப்ரேஷனுக்கு’ ஆதரவு தெரிவித்துஉள்ள ரஷியா, ‘ உரி இராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தே வந்தனர்,” என்றும்  தெரிவித்துள்ளது.

உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 28-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தின் சிறப்பு படை பயங்கரவாத முகாம்களை வேட்டையாடியது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் பாகிஸ்தான் பகுதியில் பூஞ்ச், குப்வாரா பகுதியையட்டியுள்ள பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கெல் மற்றும் லிபா செக்டார்களில் துல்லியமான தாக்குதல்களை இந்திய ராணுவம் நடத்தியது. இந்த தாக்குதல்களின்போது 38 பயங்கரவாதிகளும், 2 சிப்பாய்களும் கொன்று குவிக்கப்பட்டனர்.

பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆனால் உரியில் தாக்குதல் நடத்திய பங்கரவாதிகள் எங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் கிடையாது, இந்தியா எங்களது பகுதியில் ‘சர்ஜிக்கல் ஆப்ரேஷனை’ முன்னெடுக்கவும் இல்லை என்று மறுத்து வருகிறது.

இருநாட்டு எல்லையில் பதட்டமான நிலை ஏற்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இவ்வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் முன்னெடுத்த ‘சர்ஜிக்கல் ஆப்ரேஷனுக்கு’ ஆதரவு தெரிவித்துஉள்ள ரஷியா, ‘ உரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தே வந்தனர்,” என்று கூறிஉள்ளது. எந்தவொரு நாட்டுக்கும் தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை உண்டு என்று ரஷியா கூறிஉள்ளது. ஆங்கில செய்தி சேனலுக்கு இந்தியாவுக்கான ரஷியா தூதர் அலெக்ஸாண்டர் எம்.கடாகின் பேசுகையில்,

”இந்தியாவின் ராணுவ நிலைகள் மற்றும் அமைதியான மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது மனித உரிமை மீறலின் உச்சம். இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முன்னெடுத்த ‘சர்ஜிக்கல் ஆப்ரேஷனுக்கு’ நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்.

எந்தவொரு நாடும் தன்னைக் காத்துக் கொள்ள உரிமை உண்டு.” என்று கூறிஉள்ளார். உரியில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளே என்று கூறிஉள்ள கடாகின், பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாட்டை நிறுத்தி கொள்ளவேண்டும் என்றார்.

எல்லைதாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு ரஷியா என்றுமே துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்துடன் ரஷிய ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதில் இந்தியாவின் கவலையை தணிக்கும் வகையில் கடாகின், பயிற்சியானது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெறவில்லை என்று கூறிஉள்ளார். ரஷியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ பயிற்சி குறித்து இந்தியா கவலைப்பட வேண்டாம், பயிற்சியானது பயங்கரவாதத்திற்கு எதிரானது மட்டுமே. இந்தியாவின் நலனுக்காகவே எங்களுடைய பயிற்சி, “பாகிஸ்தான் ராணுவம் அதுவாகவே, இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை பயன்படுத்த கூடாது என்பதையே நாங்கள் கற்பிக்கிறோம்,” என்று கடாகின் கூறிஉள்ளார்.

Minister-Mangala-Samaraweera-640x400 copy

Related posts: