இந்தியாவின் அதிநவீன ஏவுகணைத் தாங்கி போர்க்கப்பல் வியட்நாமிடம் ஒப்படைப்பு!

Monday, July 24th, 2023

இந்திய கடற்படையின் அதி நவீன போர்க்கப்பலான கிர்ப்பன் வியட்நாமில் உள்ள கேம் ரேம் நகரில் அந்நாட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆயிரத்து 450 டன் எடையுள்ள ஏவுகணை தாங்கிக் கப்பலான கிர்ப்பன் நீண்ட காலமாக இந்தியக் கடற்படை சேவையில் உள்ளது.

இந்தோ பசிபிக் கடல்பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பை கருத்தில் கொண்டு வியட்நாமுக்கு இந்தியா இந்தக் கப்பலை வழங்கியுள்ளது.

இந்தியாவின் இந்தோ பசிபிக் கொள்கையில் வியட்நாம் முக்கியமான ஒரு நட்பு நாடாக உள்ளது என இந்திய கடற்படைத் தளபதி கூறியுள்ளமை குறிப்பிடத்தப்பது.

000

Related posts: