இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்!

Tuesday, October 18th, 2016

 

உள் நாட்டில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிஹந்த், அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்று,  இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியா ’Nuclear triad’ க்ளப்பில் இணைந்துள்ளது.

அதாவது காற்று, நிலம் மற்றும் நீரிலிருந்து அணுவாயுதம் ஏவக் கூடிய வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துவிட்டது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில்   ஐ.என்.எஸ் அரிஹந்த்  தயாரிக்கப்பட்டது. ஆழ்கடல் சோதனை, ஆயுத சோதனை உட்பட பல்வேறு நிலைகளில் சோதித்துப் பார்த்ததில் அனைத்திலும் வெற்றி பெற்றது.

6000 டன் எடையுள்ள இந்த கப்பலில் 700 கி.மீ. தூரத்துக்கு மேல் பாய்ந்து சென்று தாக்கும் கே 15 ரக ஏவுகணை மற்றும் 3,500 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் கே 4 ஏவுகணை ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

nuc_14265