இந்தியர்களை குறி வைத்து தற்கொலை தாக்குதல்: ஆப்கனில் 20 பேர் பலி!
Monday, July 2nd, 2018ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதிலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை இனத்தவர் வசித்து வருகின்றனர். பேரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கான் நாட்டிற்கு இந்தியா பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்நாட்டில் வரும் அக்டோபர் மாதத்தில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இத்த தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவில் சீக்கிய மற்றும் இந்துக்கள் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில் ஜலலாபாத் நகரில் மருத்துவமனை கட்டத்தை திறப்பு விழாவில் நாட்டின் அதிபர் அஷ்ரப் கானி கலந்து கொண்டார். அவர் சென்ற சில மணி நேரங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.சம்பவத்தில்20 பேர் கொல்லப்பட்டனர். கடைகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை இனத்தவரை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மேலும் பொது தேர்தலில் போட்டியிடும் சீக்கிய வேட்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார் என கறினார்.இந்தியர்கள் மீதான தாக்குதலை உறுதிபடுத்தி உள்ள ஆப்கானில் உள்ள இந்திய தூதரகம் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு உலகளாவிய போராட்டம் தேவை என்பதை இந்த தாக்குதல்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது “என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இது வரையில் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கனில் சீக்கியர்கள் மீதான தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் சீக்கியர்கள் மற்றும் இந்தியர்கள் மீதான தாக்குதலை மாநில அரசு கடுமையாக கண்டனம் செய்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என தெரிவித்துள்ளார்
Related posts:
|
|