இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நில அதிர்வு !

Wednesday, July 10th, 2024

இந்தியப் பெருங்கடலில் தென்னாபிரிக்காவுக்கு தெற்கே இன்று (10) சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா – கேப்டவுன் நகரத்திலிருந்து 2,500 கி.மீ. தொலைவில் இந்நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

இதேவேளை இந்தியாவிலும் ஆங்காங்கே சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் – ஹிங்கோலி பகுதியில் இன்று காலை 7.14 க்கு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஹிங்கோலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், வீடுகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: