இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 8200ஆக அதிகரிப்பு!

Friday, March 27th, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8200ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் இத்தாலியில் 721 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 528,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 23,942 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 377, 000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், 123,000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்

Related posts: