இது திட்டமிட்ட சதி – பிரித்தானிய பிரதமர்!

Thursday, March 23rd, 2017

ஜனநாயகத்தை பிடிக்காதவர்கள் தான் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பிரித்தானியப் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் உள்ள பாராளுமன்றத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டார். இதனால் பொலிசார் அவரை சம்பவ இடத்திலே சுட்டுத்தள்ளினர். இந்த பயங்கரவாத தாக்குதலால் லண்டன் மக்கள் பதற்றத்துடன் உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் தெரசாமே கூறுகையில், வெஸ்டர்மேன் பாலத்தின் மர்ம நபர் ஒருவர் நடத்திய விபத்தில் இரண்டு பேர் பலியாகினார். அதைத் தொடர்ந்து பொலிசார் ஒருவரை அந்த நபர் பாராளுமன்ற வளாகத்தில் கத்தியை வைத்து குத்தியுள்ளார். இதில் அந்த பொலிசாரும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தால் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்வதாக மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனக்கு தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு விபத்து போன்று இல்லை என்றும் தீவிரவாதிகள் தான் இதை திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். லண்டனில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இலண்டனில் உள்ள இந்த பாராளுமன்றம் தான் உலகின் மிகவும் பழமை வாய்ந்த பாராளுமன்றம், இங்கு சுதந்திரமாக பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

இதன் காரணமாகவே, சிறப்பு வாய்ந்த இந்த பாராளுமன்றம் உலகில் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதை எல்லாம் பிடிக்காதவர்கள் தான் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். நான் ஒன்றைத் தெளிவாக கூறிக்கொள்கிறேன், வன்முறைகள் மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடியும் என்றும் வழக்கம் போல் நாளை பாராளுமன்றம் நடைபெறும் என்றும் சாதாரணமாக அனைவரும் வர வேண்டும் என கேட்டுள்ளார்.

Related posts: