இது எனது இறுதி உரை­யா­கக்­கூட இருக்­கலாம்’ – பிடெல் கெஸ்ட்ரோ!

Friday, April 22nd, 2016

‘இதுவே என் கடைசி உரை­யா­கக்­கூட இருக்­கலாம்’. இலத்தீன் அமெ­ரிக்க நண்­பர்­க­ளுக்கும் பிற நாட்டு நண்­பர்­களுக்கும் கியூப மக்கள் எப்­போதும் வெற்­றி­யா­ளர்­களே என்ற செய்­தியை தெரி­விக்க வேண்டும்” என கியூப முன்னாள் ஜனா­தி­பதி பிடெல் கெஸ்ட்ரோ தனது உரையில் தெரி­வித்­துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கியூப காங்­கிரஸ் கம்­யூனிஸ்ட் கட்­சியின் முக்­கிய தலைமை பொறுப்பை 84 வய­தான ராவுல் கெஸ்ட்­ரோ­விடம் ஒப்­ப­டைப்­பது என்ற முடிவை எடுத்­தது.

முக்­கிய முடிவு எட்­டப்­பட்ட அந்த ஆலோ­சனைக் கூட்டம் முடிந்து தலை­நகர் ஹவா­னாவிலுள்ள பாரம்­ப­ரிய அரங்கில் பிடெல் கெஸ்ட்ரோ உரை­யாற்­றினார்.

இதன்­போது அவர் தெரி­வித்­துள்­ள­தாவது, இதுவே என் கடைசி உரை­யாகக் கூட இருக்­கலாம். இலத்தீன் அமெ­ரிக்க நண்­பர்­களுக்கும் பிற நாட்டு நண்­பர்­க­ளுக்கும் கியூப மக்கள் எப்­போதும் வெற்­றி­யா­ளர்­களே என்ற செய்­தியை தெரி­விக்க வேண்டும்.

நான் விரைவில் 90 வயதை தொட்டு விடுவேன். அதன்­பின்னர் நானும் மற்ற வயோ­தி­பர்­களைப் போலவே இருப்பேன். காலம் என்னை மறையச் செய்யும். ஆனால், கியூ­பாவின் கம்­யூ­னிஸ்ட்கள் இந்த புவியில் ஒரு சிறந்த உதா­ர­ண­மாக திகழ்வர்.

கம்­யூனிஸ்ட் சித்­தாந்­தத்தை உத்வே­கத்­துடன் அதற்­குண்­டான உரிய மரி­யா­தை­யு­டனும் பின்­பற்­றினால் மனித குலத்­திற்கு ஆகச் சிறந்த பொரு­ளா­தார, கலா­சார நன்­மை­களைச் செய்ய முடியும் என்­பதை உணர்த்தலாம். நமது கோட்பாடுகளை நிலைநிறுத்த சமரசமின்றி போராட வேண்டும் என தெரி­வித்­துள்ளார்.

Related posts: