இடதுசாரி அரசியல் கட்சி உறுப்பினர்களின் கொலைகளுக்கு மன்னிப்பு கோரினார் கொலம்பிய ஜனாதிபதி!

1980களில் இடதுசாரி அரசியல் கட்சியின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை திட்டமிட்டு கொலை செய்ததில் அரசின் பங்கிற்கு கொலம்பிய அதிபர் குவான் மானுவல் சந்தோஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
1980 ஆம் ஆண்டு உருவான அமைதி உடன்படிக்கையை தொடர்ந்து ஃபார்க் (FARC) கொரில்லா குழுவின் உறுப்பினர்கள், நாட்டுப்பற்றாளர் ஐக்கிய கட்சியை உருவாக்கினர்.
பல அதிபர் வேட்பாளர்கள் உள்பட சுமார் 3000 நாட்டுப்பற்றாளர் ஐக்கிய கட்சியின் உறுப்பினர்கள், அரசின் உடந்தையோடு வலதுசாரி துணை ராணுவப் படைப்பிரிவுகளாலும், போதை மருந்து கடத்துபவர்களாலும் கொல்லப்பட்டனர்.
கொலம்பிய அரசுக்கும், ஃபார்க்-கிற்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் இரண்டு வரங்களுக்கு குறைவாக இருக்கும் நிலையில் அதிபர் சந்தோஸின் இந்த மன்னிப்பு வந்துள்ளது.
இந்த அமைதி ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு மேலான மோதலை முடிவுக்கு வருவதைக் குறிக்கும் விதமாக வருகிறது.
Related posts:
|
|