இங்கிலாந்தின் மிகப் பழமையான ஹொட்டலில் தீ விபத்து!

Saturday, October 29th, 2016

இங்கிலாந்தின் Exeter நகரில் உள்ள Royal Clarence Hotel ஹொட்டல் மிகப் பழமைவாய்ந்தது. முதன்முறையாக 1769ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஹொட்டலில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.எனினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இந்த நாள் Exeter நகருக்கு கறுப்பு தினமாகும் என ஹொட்டலின் Chef Michael Caines தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த 15 ஆண்டுகளாக ஹொட்டலில் வேலை செய்து வருவதாகவும், இந்த தீ விபத்தினால் மிகவும் மனமுடைந்து போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தீ விபத்து நடந்த சமயத்தில் முக்கியமான சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதுதொடர்பான வீடியோக்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

england

england 1

Related posts: