ஆஸ்திரேலியவில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சாத்தியம்!

Sunday, July 3rd, 2016

பொது தேர்தலில் 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முடிவுகள் மிகவும் நெருக்கமாக இருப்பதால் தொங்கு நாடாளுமன்றம் அமைவதற்கான சாத்தியக்கூறு நிலவுகிறது.

பெரும்பான்மை பெற்று அரசு அமைக்கலாம் என்று நம்புவதாக பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்திருக்கிறார். கீழவையில் மட்டும் பிரதமரின் கன்சர்வேடிவ் கூட்டணி குறைந்தது 11 இருக்கைகளை இழந்திருக்கிறது.

தொழிலாளர் கட்சியின் கொள்கைகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் இத்தேர்தல் முடிவு என எதிர்க்கட்சி தலைவர் பில் ஷாட்டன் கூறியிருக்கிறார்.

டர்ன்புல் பெரும்பான்மை பெற முடியாமல் போனால், சுயேட்சைகளையும், சிறிய கட்சிகளையும் சேர்த்து கொண்டு அரசமைக்க இரு கட்சிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

குடியேற்றத்திற்கு எதிரான ஒன் நேசன் கட்சி பல பகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

செவ்வாய்கிழமை வாக்குகளை மீண்டும் எண்ணத் தொடங்கினாலும், முடிவுகள் பல நாட்களாக தெரிய வராது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts: