ஆஸ்கர் பிஸ்டோரியசுக்கு ஆறு ஆண்டு சிறை!

Thursday, July 7th, 2016

தென் ஆப்பிரிக்க மாற்றுத்திறனாளி ஓட்ட வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியசுக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு தனது காதலியான ரீவா ஸ்டீன்கேம்ப்பையை பிஸ்டோரியஸ் சுட்டுக் கொலை செய்தார். குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிஸ்டோரியஸ், வீட்டுக்குள் திருடர்கள் நுழைகிறார்கள் என நினைத்து சுட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆஸ்கர் பிஸ்டோரியஸ்யை அந்நாட்டு நீதிமன்றம் குற்றவாளியென அறிவித்துள்ளது.தென் ஆப்பிரிக்க சட்ட விதிகளின்படி திட்டமிட்டுட்ட கொலை குற்றச்சாட்டுகளுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக அவர் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர், இவருக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன் போது பிஸ்டோரியசுக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related posts: