ஆவணங்கள் கசிந்ததது எப்படி?: சிறப்புக் குழு அமைக்கிறது பனாமா

Friday, April 8th, 2016

 

சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்செக்கவிலிருந்து கோடிக்கணக்கான ஆவணங்கள் கசிந்ததது எப்படி என விசாரிப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை பனாமா அமைத்து வருகின்றது.

உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்கள் அடங்கிய சுயாதீன குழு ஒன்றை வெளியுறவு அமைச்சகம்அமைக்கும் என்று அந்நாட்டு அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா தெரிவித்துள்ளார்.

தற்போதைய திட்டங்களை மதிப்பிட்டுஇ பனாமாவின் நிதி மற்றும் நீதித் துறையின்வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்த புதிய திட்டங்களை அந்த குழு முன்வைக்கும் என்று அவர்தெரிவித்துள்ளார்.

பனாமா அதன் வரி துறையை நேர்மையானதாக தவறிவிட்டதாக பொருளாதார ஒத்துழைப்புமற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு விமர்சித்தபோது இந்த வார முற்பகுதியில் பனாமா அதற்குகோபத்துடன் எதிர்ப்பு தெரிவித்தது.

Related posts: