ஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டுகொல்ல உத்தரவிட்ட ஜனாதிபதி!

கடுமையான சட்டங்கள் பிறப்பிப்பதில் பெயர்போன வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங், தமது ஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் வழக்கமான ஆலோசனை கூட்டத்தை நாடின் உயர் அதிகாரிகளுடன் கூட்டியுள்ளார். சம்பவத்தன்று கூட்டத்தின் இடையே கல்வித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் அசதியால் கண் அயர்ந்துள்ளதாக தெரிய வந்தது.இச்சம்பவத்தில் உக்கிர கோபமடைந்த ஜனாதிபதி கிம் ஜோங் அவரையும், அவருடன் இன்னொரு அதிகாரியையும் விமானத்தை சுட்டு வீழ்த்தப்பயன்படுத்தும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உத்தரவை அடுத்து குறிப்பிட்ட அதிகாரிகளை கைது செய்துள்ள சிறப்பு உளவுப்பிரிவினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதில் குறிப்பிட்ட கல்வித்துறை அதிகாரிக்கு ஜனாதிபதி கிம் மீது கடும் வெறுப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் கிம் பிறப்பித்துள்ள சீர்த்திருத்தங்களை கல்வித்துறையில் அமல்படுத்தவும் மறுத்து வந்துள்ளதை விசாரணையில் உளவுப்பிரிவினர் தெரிந்து கொண்டனர்.
மட்டுமின்றி இவரது கிம் ஜோங் விரோத போக்கிற்கு பல முறை தண்டனையும் பெற்று வந்துள்ளதும் தெரிய வந்தது. இவருடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் தனது சொந்த திட்டமொன்றை ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்த காரணத்தினால் ஜனாதிபதி கிம் ஜோங் இவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் கண்டிப்பாக நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் 17 பதக்கங்களையாவது பெற்று வரவேண்டும் என கிம் உத்தரவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.இந்த எண்ணிக்கை குறைந்தால் பதக்கம் பெறாத வீரர்களை சுரங்க வேலைக்கு அனுப்புவதாகவும் அவர் கட்டளையிட்டுருந்தார்.
Related posts:
|
|