ஆர்வலர்கள் கருத்துக்களை அரசுக்குக் கூறும் நிறுவனத்துக்கு சமூக ஊடகங்கள் தடை!

சமூக ஊடங்களில் ஆர்வலர்கள் மற்றும் அரச எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அமெரிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு உதவுவதாக குற்றம் சாட்டப்படும் சமூகக் கண்காணிப்பு நிறுவனம் ஒன்று , தங்களது தகவல் தளங்களை அணுகுவதை ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் தடை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிகாகோவிலிருந்து இயங்கும் , ஜியோஃபீடியா என்ற பகுப்பாய்வு நிறுவனம், போலிசாரை, சமூக ஊடகங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளை “ பக்கவாசல் வழியாக“ வேவு பார்க்க அனுமதித்தது என்று அமெரிக்க சிவில் உரிமைகள் யூனியன் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை வருகிறது.
சமூக ஊடகங்களில் ஆர்வலர்களும் எதிர்ப்பாளர்களும் செய்யும் பதிவுகளை உடனுக்குடன் அமெரிக்க சட்ட அமலாக்க அிகாரிகளுக்கு விற்பதாக இந்த நிறுவனம் குற்றம் சாட்டப்படுகிறது.
சமூக ஊடக நிறுவனங்கள் அரச நிறுவனங்களுடன் எந்த அளவுக்கு நெருக்கமாக ஒத்துழைக்கின்றன என்பது குறித்து கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த செய்தி வருகிறது.ஜீயோஃபீடியா தனது தளம் பொது பாதுகாப்பு லாபங்களைத் தருகின்றது என்று கூறி, தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது.சமீபத்தில் மத்யூ சூறாவளியை அடுத்து மீட்பு நடவடிக்கைளில் உதவ அரச நிறுவனங்களுக்கு தான் உதவியதாக அது கூறியது.
Related posts:
|
|