ஆர்மீனிய பிரதமர் பதவி இராஜினாமா!

Wednesday, April 25th, 2018

ஆர்மீனிய பிரதமர் செர்க் சார்கிஸ்யான் பதவி விலகியதை தொடர்ந்து தலைநகர் எரவானில் ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த இவர் மீண்டும் பிரதமராகும் அவரது முடிவை எதிர்த்து கடந்த 11 நாட்களாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இதனையடுத்தே அவர்பதவி விலக தீர்மானித்தார்.

இந்தநிலையில், துணைப் பிரதமர் கரேன் கராபெட்யான் புதிய பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: