ஆர்மீனியா தேர்தலில் பிரதமர் நிகோல் வெற்றி!

Tuesday, December 11th, 2018

ஆர்மீனியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நிகோல் பஷின்யானின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்

இங்கு கடந்த 10 ஆண்டுகளாக அதிபராக இருந்த சாக்ஷியானை புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்துவிட்டு நிகோல் பஷின்யான் பிரதமரானார்.

இந்தநிலையில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பிரதமர் நிகோல் பஷின்யானின் கட்சி அமோக வெற்றிபெற்றது.

தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 70 சதவீதம் வாக்குகளை நிகோல் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

Related posts: