ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வரவேண்டும்- பிரான்ஸ் பிரதமர் வலியுறுத்து!

பிரான்ஸில் நான்கு வாரங்களாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்து, அந்த நாட்டு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ் மக்கள் தேசிய ஒற்றுமையினை கருத்தில் கொண்டு அதற்குரிய முறையில் செயல்படுமாறு அவர் கோரியுள்ளார்.
இந்தநிலையில், நேற்றும் பிரான்ஸ் காவற்துறையினர் ஆர்ப்பாட்டகாரர்களை கலைக்கும் நோக்கில் கண்ணீர் புகை மற்றும் றப்பர் தோட்டா பிரயோகத்தினை மேற்கொண்டனர்.
எரிபொருட்களுக்கான வரி அதிக அளவில் அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பை தெரிவித்து நாடளாவிய ரீதியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பல பகுதிகளில் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் வன்செயலாக மாறியதனால் பல கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் தீயூட்டப்பட்டன.
அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை ஆர்ப்பாடத்தின் மூலம் வெளிப்படுத்துபவர்களின் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெறும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இதுவரை ஆயிரத்து 700க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்ட காவற்துறையினருக்கு பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தமது நன்றியை தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|