ஆர்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் – ஹொங்கொங்கில் சம்பவம்!

Tuesday, July 2nd, 2019

ஹொங்கொங் நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்திருந்த ஆர்ப்பாட்டக் காரர்களை அந்த நாட்டின் காவற்துறையினர் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டு கலைத்துள்ளனர்.

ஹொங்கொங்கில் கைதாகின்றவர்களை சீனாவிற்கு நாடுகடத்தும் வகையிலான சர்ச்சைக்குரிய சட்ட மூலம் ஒன்றுக்கு எதிராக அங்கு தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த சட்டமூலத்தை தற்காலிகமாக அந்த நாட்டின் அரசாங்கம் பிற்போட்டுள்ளது.எனினும் அது முற்றாக கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

நேற்றையதினம் அமைதியான முறையில் போராட்டம் ஆரம்பித்திருந்தாலும், அதில் கலந்து கொண்டிருந்த ஒருபிரிவினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து அங்கு வன்முறைகள் பதிவாகி இருக்கின்றன.

Related posts: