ஆர்ஜென்டினா முன்னாள் அதிபர் காலமானார்!

Wednesday, July 10th, 2019

ஆர்ஜென்டினா நாட்டின் முன்னாள் அதிபர் பெர்னான்டோ டே லா ருவா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

ஆர்ஜென்டினா நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பெர்னான்டோ டே லா ருவா சட்டப்படிப்பை முடித்துவிட்டு அந்நாட்டில் 18-ம் நூற்றாண்டு காலத்தில் தொடங்கப்பட்ட நடுநிலை சமூக-விடுதலை இயக்கத்தின் மூலம் அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தார்.

1973-ம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராகி, படிப்படியாக முன்னேறிய பெர்னான்டோ டே லா ருவா, புதிய சட்டத்திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட புய்னோஸ் எய்ரேஸ் அரசுக்கு மேயராக தலைமை தாங்கினார்.

2016-ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர் சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கட்ட பெர்னான்டோ டே லா ருவா(81) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்