ஆயுள் தண்டனை கைதிகள் உட்பட 306 பேருக்கு விடுதலை: ஒபாமா அதிரடி உத்தரவு

சிறிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இன்று உத்தரவிட்டுள்ளார்.
பாரக் ஒபாமா தான் ஜனாதிபதியாக இரண்டாம் முறை பதவியேற்றதில் இருந்து சிறை கைதிகளுக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
இதன்படி நாட்டின் சில முக்கிய சிறைச்சாலைகளை பார்வையிட்ட அவர், பெரிய குற்றங்கள் இல்லாமல், போதைப்பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட சிறிய குற்றங்களில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க முடிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 110 ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட 306 பேரை விடுதலை செய்ய அவர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், வன்முறை இல்லாத சிறிய குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைப்பது அர்த்தமில்லாத ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|