ஆயுதங்கள் விற்ற நபருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Monday, August 1st, 2016

இணையதளம் வாயிலாக ஜேர்மனியில் ஆயுதங்களை விற்பனை செய்து வந்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Christian L(32) என்ற நபர், dark net என்ற இணைதளம் வாயிலாக கடந்த 20 மாதங்களுக்குள், தானியங்கி, அரை தானியங்கி மற்றும் இராணுவ ஆயுதங்களை விற்பனை செய்துள்ளார். இவர்க, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், Cologne விமானநிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தியபோது, music speaker- க்குள் 3 துப்பாக்கிகளை மறைத்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனைத்தொடர்ந்து இவரை கைது செய்த பொலிசார், இதுகுறித்து விசாரணை நடத்தியதில், 65 ஆயுதங்களை darknet என்ற இணையதளம் வாயிலாக விற்பனை செய்துள்ளார், கடந்த வெள்ளிக்கிழமை ஜேர்மனியின் முனிச் நகரில் மர்மநபர் ஒருவர் 9 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார், அவன் பயன்படுத்திய துப்பாக்கிகூட draknet இணையதளம் வாயிலாக இந்த நபரிடம் வாங்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.

தற்போது, இந்நபர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வர்த்தக ரீதியில் இவர் ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது நிரூபணமாகியுள்ளதால் இவருக்கு 5 1/2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts: