ஆயிரமாவது ஆண்டு நிகழ்வில் ரஷிய அதிபர் பங்கேற்பு!

Sunday, May 29th, 2016

கிரேக்கத்தின் எதோஸ் மலையிலுள்ள ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களின் மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றில் நடைபெறும் கொண்டாட்டங்களில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றுள்ளார்.

ரஷிய துறவிகள் புனித பென்டிலெய்மோன் மடாலயத்தில் வாழ்ந்து வருகின்ற ஆயிரமாவது ஆண்டு இங்கு கொண்டாடப்படுகிறது.

தான் ஆர்த்தோடாக்ஸ் நம்பிக்கையில் ஊன்றியவர் என்று அடிக்கடி கூறிக்கொண்ட, புதின் ரஷியாவின் ஆத்தோடாக்ஸ் திருச்சபையின் தலைவர் முதுபெரும் தந்தை கிரில் அவர்களுடன் இதில் கலந்து கொண்டுள்ளார்.

கிரேக்கமும் ரஷியாவும் ஆத்தோடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மிகுந்த நாடுகளாக இருப்பதால் நெருங்கிய மத உறவுகளை பகிர்ந்து வருகின்றன.

20 மடாலையங்களுக்கு உறைவிடமான எதோஸ் மலை பைசான்டியன் காலத்திலிருந்தே தன்னாட்சி பகுதியாக உள்ளது.

160528151543_putin_512x288_getty160528152016_mount_athos_512x288_istock 160528151813_athos_512x288_getty

Related posts: