ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை விடியவிடிய வேட்டையாடிய மக்கள்!

Sunday, August 14th, 2016

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஷுவாங்தியான் கிராமத்தில்தான் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கைத்தடிகளுடன் பாம்பு வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இந்த கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்து பொதுமக்களை தொல்லைக்கு ஆளாக்கியதால், அவைகளில் இருந்து தங்களையும் தங்கள் மனைவி குழந்தைகளையும் காப்பாற்றும் பொருட்டு இரவு பகல் பாராமல் வேட்டையில் குதித்துள்ளனர்.

கடந்த மாதம் இரண்டு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இப்பகுதியில் கொத்தாக பாம்புகளை அவிழ்த்து விட்டு விட்டு தப்பியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொத்தாக பாம்புகளை இப்பகுதியில் திறந்து விடுவதற்கான காரணம் என்னவென்று இதுவரை இப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை, இருப்பினும் கிராமத்தின் பல பகுதிகளில் மூலிகை செடிகளை வளர்த்து வந்தாலும், அவை இல்லாத பகுதிகளில் பாம்புகள் மொத்தமும் பரவியுள்ளதாகவும், அவைகளை அப்புறப்படுத்துவதே பெரும் தொல்லையாக இருக்கிறது என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாம்புகளின் தொல்லை அதிகமிருக்கும் பகுதியில் வசித்து வரும் 82 வயது மூதாட்டி ஒருவர் கூறுகையில், பாம்புகளை அப்புறப்படுத்தும் பணியில் இறங்க தாம் தயார் எனவும், நிம்மதியாக தூங்குவதற்கு கூட முடியாமல் இந்த தள்ளாடும் வயதில் மிகவும் துன்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் பாம்புகளை வெளியேற்றுவது இது முதன் முறையல்ல, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியில் திடீரென்று இதுபோலவே பாம்புகள் புகுந்தன. ஆனால் உடனடியாக அப்பகுதியில் அமைந்துள்ள வன விலங்குகள் பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கவும்,

அவர்கள் வந்து சுமார் 10 நாட்கள் பாடுபட்டு 150-கும் மேற்பட்ட பாம்புகளை இந்த பகுதியில் இருந்து மீட்டனர்.

இதனையடுத்து, இதுபோன்று வன விலங்குகளை பொதுவெளியில் திறந்து விடுபவர்கள் உரிய அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டது. மட்டுமின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நேரிட்டால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: