ஆப்ரிக்காவில் செல்வாக்கை பெறும் முயற்சியில் ஜப்பான்!

Saturday, August 27th, 2016

ஆப்ரிக்க கண்டத்தில் வளர்ச்சி மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அங்கு முதலீடாகவும், உதவி நிதியாகவும் 30 பில்லியன் டாலர்களை அளிப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதியளித்துள்ளார்.

இந்த நிதியில் மூன்றில் ஒரு பங்கு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு செலவிடப்படும். கென்யாவில் நாட்டின் முன்னேற்றம் குறித்து நடந்த இரண்டு நாள் மாநாட்டின் தொடக்கத்தில் அபே இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.

ஆப்பிரிக்காவின் முன்னேற்றம் குறித்த டோக்கியோவின் சர்வதேச கூட்டம் ஆப்பிரிக்க கண்டத்தில் நடப்பது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம், தனது போட்டி நாடான சீனாவிடம் இழந்துள்ள ஏற்றுமதி சந்தைகளையும், செல்வாக்கையும் திரும்பப் பெற முயல்கிறது ஜப்பான்.

Related posts: