ஆப்கான் – பாகிஸ்தான் இடையேயான எல்லைப்பகுதி  மூடப்பட்டது!

Sunday, August 21st, 2016

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை வாயிலைத் திரும்ப திறக்கும் பிரச்சனை குறித்து இருநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்துள்ளது.

இது எல்லை தாண்டி வியாபாரத்தில் ஈடுபடும் சுமார் பத்தாயிரம் வணிகர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் பாகிஸ்தானின் கொடியை தீயிட்டு கொளுத்தினார்கள் என்றும் எல்லை பகுதியில் கற்களை வீசி எறிந்தனர் என்றும் பலுசிஸ்தான் மற்றும் கந்தஹார் மாகாணத்திற்கு இடையே உள்ள சமன் எல்லை நுழைவை பாகிஸ்தான் மூடியது.

இந்த எல்லைப் பகுதி மூடப்பட்டதால் நேடோ பொருட்களை ஆப்கானிதானுக்கு விநியோகம் செய்யும் டிரக்குகள் உட்பட நூற்றுக்கணக்கான டிரக்குகள் அங்கு காத்து கிடக்கின்றன.

Related posts: