ஆப்கானிஸ்தான்: ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறை வைக்கப்பட்ட 19 பேர் விடுவிப்பு!

Tuesday, November 1st, 2016

ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு மாகாணமான நாங்கர்ஹாரில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 19 பேரை, அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் விடுத்துள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.

இதே பகுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், 11 ஐ.எஸ் போராளிகள் ஒரு வான் வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஆப்கான் -பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள நாங்கர்ஹார் மாகாணம் ஐ.எஸ் இயக்கத்தினரின் கோட்டையாக கருதப்படுகிறது.

இதனிடையே, இந்த மாகாணத்தில் நடைபெற்ற ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆறு மூத்த பழங்குடித் தலைவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

             _92161307_isis_afghanistan_640x360__nocredit